ஆசிரியர் குறிப்பு
கர்த்தர்
ராஜரீகம் பண்ணுகிறார்.
நான் ஒரு
கிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.
சிறு வயதிலிருந்தே ஆன்மீக பற்றோடு விக்கிரக ஆராதனையை கேள்வி கேட்டும், சடங்குகளை கேள்வி கேட்டும் வந்துள்ளேன்.
ஆயினும்
என் பெற்றோர் வழிசென்று பற்பல விக்கிரக ஆராதனைகள் நடத்தி வந்தேன். என் பெற்றோர் சாயி பாபா எனும் மனிதனை கடவுளாக வழிபட்டு வந்தனர்.
நான்
படித்து முடிக்கும் தருவாயில் ஒரு வித நரம்பு (நியூரோ) நோய் வந்து, தலையுள் யாரோ கயிறு கட்டி இழுப்பார்கள் போல் வரும். அந்த வித இழுப்பு வந்தால் சில நிமிடங்களுக்கு கண்பார்வை இழந்து விடுவேன்.
நோய்க்கான
சிகிச்சை அளிக்க போதிய பணமில்லை. ஆதலின் நோயை பொருட்படுத்தாது இருந்தோம்.
எனினும்
படித்து முடித்து, நல்ல தேர்ச்சி பெற்று மின்னியல் பட்டயம் (Diploma in
Electrical Engineer) கல்வியால்
ஒரு தொழிற்சாலை பராமரிப்பு துறையில் (maintenance department) வேலை செய்து வந்தேன். அதிஅழுத்த மின்சாரம் கொண்ட இயந்திரங்கள் பழுதாகும் போது அதை கூர்ந்து கவனித்து பராமரித்தல என் வேலை. இவ்வேலையை நரம்பு இழுப்பின் காரணமாக தொடர முயலா நிலை.
ஆகவே
அந்த வேலையை விட்டு விற்பனை துறையில் நான் வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன்.
இங்கு
தான் நம் மீட்பர் இயேசுவை குறித்து ஒரு உடன்வேலை செய்யும் நபர் கூறினார். முதலில் மிகவும் எதிர்த்து பேசுவேன், அவரை உதாசீனம் செய்து வந்தேன்.
நினைத்து
பார்த்தால் நம் கர்த்தர் ஒரு உவமையில் ஒரு கைம்பெண் நியாயாதிபதியிடம் அன்றாடம் வேண்டியது போல், (லூக்கா 18 : 2 - 7) இவர் என்னிடம் கிறிஸ்து குறித்து கூறிவந்தார். முடிவு நாட்கள் பற்றி வரும் ஒரு சில புத்தகங்கள் கொடுத்து வந்தார்.
பிறகு
ஒருநாள் நடந்த வாக்குவாதத்தில் அவர், மெய்யான கடவுளை உன் அறையில் சென்று தாழிட்டு அழை. அவரோடே பேசு. அவர் பேசுவார் என்றார்.
அதை
நான் ஏற்று, பவுல் தன் ஊழியத்தில் கண்டது போல் "பெயர் தெரியா தெய்வமே" என்று கூறி தொடங்கினேன் என் வேண்டுதல்கள்.பல நாட்கள் சென்றன.
ஒருபதிலும் இல்லை. ஏதோ ஏமாற்று வேலை என்று கூட நினைத்தேன்.
பலநாள்
கடந்தது. ஒருநாள் என்னை ஒரு சக்தி இழுத்துச் சென்று ஒரு முடிவு கால புத்தகம் ஒன்றை எடுத்து அதில் கடைசி பக்கம் இருந்த வேண்டுதலை படிக்க வைத்தது. அதை படித்து கையொப்பமிட்டேன்.
அன்று
இரவு முதல் இயேசுவை என் சொந்த மீட்பராக ஏற்று நான் அவரை குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.
ஆனால்
என் மனதில் அச்சம். கேட்டால் இவர் என்னை கிறித்துவனாய் மாற்றி விடுவாரோ என்று...
ஆனால்
நான் கையொப்பமிட்டதை அவரிடம் தயங்கி சில வாரங்களுக்கு பின் கூறினேன்.
அவர்
உடனே தேவனை போற்றி, இவ்வளவே, தேவன் உங்களை வழிநடத்தும் படியே வாழுங்கள் என்றார்.
விவிலியம்
படித்து தினமும் வேண்டுதல் ஏறெடுத்து வந்தேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று அந்நிய மொழி பேசி கர்த்தரை மேன்மை படுத்த அருளினார். ஆயினும் திருமுழுக்கு ஞானஸ்நானம் பெறவில்லை.
பின்னர்
ஞாயிறு காலை புதுவாழ்வு ஏ ஜி சபையில்
நடக்கும் சில ஆராதனையில், பற்பல தடைகள் மீறி கலந்து கொள்ள என் தேவன் துணை நின்றார்.
ஒரு
ஞாயிறு என்னை திருமுழுக்கு எடுக்க ஒப்பு கொடுக்க ஆவியானவர் வழிநடத்திய படியே, நான் 1996ல் ஏ ஜி
சபை, சின்ன மலை, சென்னையில் திருமுழுக்கு எடுத்துக் கொண்டேன். திருமுழுக்கு எடுக்க ஒப்பு கொடுத்த அன்று மாற்று துணி கூட இல்லை என்னிடம்.
ஆனால்
அன்றே திருமுழுக்கு பெற ஆவியானவர் வழிநடத்திய படியே ஒப்பு கொடுத்து, திருமுழுக்கு தொட்டியருகே நின்ற போது என்னிடம் நற்செய்தி பகிர்ந்த நண்பர் வந்து பேசினார். அவருக்கு வியப்பு... ஏன் இவன் இங்கு வரிசையில் நிற்கிறான் என்று. அவர் பேசிய போது எனக்கு மாற்று துணி யில்லாததை அறிந்து அவர் வீட்டிற்கு விரைந்து ஒரு மேல்சட்டையும் கால் சட்டையும் கொண்டு வந்தார். அதை உடுத்தி திருமுழுக்கு எடுத்து, பின் என்துணி அணிந்து கொண்டு வீடு சென்றேன்.
ஏதேதோ
சாக்கில் ஞாயிறு வீட்டை விட்டு வெளியேறி, ஆராதனைகள், ஆராதனை கூட்டங்கள் என்று நான் என் ஆவிக்குறிய வளர்ச்சியில் வளர, ஒருநாள் "உள்ளதை உள்ளதென்று கூறுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்" என்ற இயேசுவின் வார்த்தை மூலம் ஆவியானவர் என் பெற்றோர், என் உடன் பிறந்த தமக்கை இருவரிடமும் என் மன மாற்றம் குறித்து,
படிப்படியாக கூற ஆவியானவர் வழிநடத்தினார்.
2005ல்
கர்த்தர் மணம்புரிய பணித்தார். அதன்படியே திருமணத்தில் நானும், என்
மனைவியும் கீழ்படிந்தோம்.
என்னை
பிடித்த அந்நோய் என்னை விட்டு போய் அதின் சுவடு கூட இல்லாமல் இருந்தது. ஆனால் 2012 ல் மறுபடியும் அதே
இழுப்பு வர, மருத்துவர்கள் தலை CT scan செய்து பார்த்து எந்த ஒரு சுவடும் இல்லை என்றனர். கர்த்தருக்கு மகிமை ஏறெடுத்து அவர் கொடுத்த பரிபூரண சுகத்தை அனுபவித்து வருகிறேன்.
7 ½ வருட
திருமண வாழ்வில் குழந்தை பேறில்லாமல் தவித்த எங்களுக்கு கர்த்தர் அற்புதமாக ஒரு பெண்
குழந்தையை கொடுத்தார். 2012 பிறந்தாள் குழந்தை மாயா.
பாலையாய்
வெந்தது எங்களின் வாழ்க்கையே
சோலை வனமாகக் கர்த்தர் கொடுத்தாரே
பெண்மகளை நன்றாகத் தான்
சோலை வனமாகக் கர்த்தர் கொடுத்தாரே
பெண்மகளை நன்றாகத் தான்
என்வாழ்வில்
தேவன் செய்த அற்புதங்கள் எழுதினால் அதற்கே ஒரு புத்தகம் வெளியிட வேண்டும். அநாதி அன்பினால் என்னை அன்பு கூர்ந்து, அவரின் காருண்யத்தால் இழுத்துக் கொண்டவர் நம் தேவன்.
அவரின்
திருநாமத்தை உயர்த்தவே என்னை அவர் படைத்தார் என்ற ஆழமான நம்பிக்கை என்னுள் மிக நன்றாய் விதையூன்றி, அந்த படியே கிறிஸ்துவிற்குள் ஒரு சாட்சி வாழ்க்கை வாழ என்னை அவர் காத்து நடத்தி வருகிறார். நான் எந்த இடத்தில் இருந்தாலும், கர்த்தர் நாமம் மகிமைபட என்னை அவர் பயன்படுத்தி வருகின்றார்.
பிதாவாகிய
தேவன் ஒருவருக்கே மகிமையை ஏறெடுத்து, நம் மீட்பர் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி, ஆவியானவரின் ஐக்கியம் உங்களோடே என்றும் இருப்பதாக. ஆமென்.
Comments
Post a Comment