ஆதிநூல் உருவான விதம்

இயேசு நாதர் வெண்பா எழுதி முடித்தப் பின்னர் தேவ ஊழியத்தில் என்ன பங்கு எனக்கேட்டு வந்த காலத்தில் ஆவியானவர் பணிக்க ஆதியாகமத்தின் முதல் ஏழு நாட்களில் வானத்தையும் பூமியையும் கர்த்தர் படைத்ததை சில வெண்பாக்கள் முன்பே எழுதியதை நினைவு படுத்தினார்.

இயேசு நாதர் வெண்பா எழுதிய போது கற்பனை பாக்களே இல்லாமல், நான்கு நற்செய்திகளில் உள்ள இயேசுவின் வாழ்க்கையை, போதனைகளை நிகழ்வுகளை சொன்னது சொன்ன படியே எழுத எச்சரித்தார் தேவன். “கற்பனை வளமில்லா கவிதை எனமக்கள் கீழ்நினைவு கொள்வரே“என்றேன். கீழ்படிய ஆவியானவர் பணிக்க, எழுதிய கற்பனை உவமைகளை அச்சேற்றம் செய்வதற்கு முன் திருத்தினேன். கற்பனைகளோ உவமைகளோ இல்லாது, 

வெறும் எதுகை மோனை கொண்ட நேரிசை, இன்னிசை வெண்பாக்கள் கொண்டு இயேசு நாதர் வெண்பா இயற்ற வைத்தார் தேவன்.
ஆதியாகமம் எழுத தேவன் வழிநடத்திய போது. கற்பனை வளம் இருக்கலாமா எனக் கேட்க, சத்தியம், பொருள் மாறாது கற்பனையும், உவமைகளும் கொள்ளலாம் என அனுமதிக்க, ஆதியாகமத்தில் வரும் நிகழ்வுகளில் சில கற்பனை பாக்களைச் சேர்த்துள்ளேன்.
முழு ஆதியாகமத்தையும் நான்கடி நேரிசை வெண்பாக்களால் இந்நூலை எழுத கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார்
இந்த நூலை வெளியிட அண்ணன் அருள்தாஸ் மிக்க உறுதுணையாக இருந்தார். அவர் நடத்தும் குழந்தைகள் காப்பகத்தின் பிள்ளைகளும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். குறிப்பாக, சகோதரி ராணி அவருடைய மடிக்கணிணியை தந்து உதவினார்.

கிறிஸ்துவிற்குள் சகோதரி ஜீவா ஜெபின் இந்நூல் பிழைத்திருத்தத்தின் போது உறுதுணையாக இருந்தார். என் தாயார் திருமதி சிந்தாமணி சந்திப் பிழைகள் மற்றும் பொருள் பிழைகள் கண்டு திருத்தினார்.

என்மனைவியும், என் 4 வயது மகளும், மற்றும் குடும்பத்தார் அனைவரும் இந்த முயற்சியில் உறுதுணையாக இருக்க கர்த்தர் ஆசீர்வதித்தார். 

இந்த முயற்சியில் மற்றும் பலர் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் எல்லாரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். கர்த்தர், மீதமுள்ள வேதாகம நூல்களை வெண்பாவில் எழுத அருள்செய்வார் என நம்புகிறேன். அவர் வழிநடத்தும் படியே அவைகளை எழுதி அச்சேற்றுவேன்.


துதி, கணம், மகிமை, ஆளுமை, வல்லமை எல்லாம் அகிலம் படைத்த தேவனுக்கே சேர்வதாக. 

Comments

Popular posts from this blog